ரோந்துப் பணியில் மகேந்திர சிங் தோனி!!

Last Updated: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (14:45 IST)
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கிரிக்கெட் வீரர் தோனி 2 வாரங்களுக்கு ரோந்து பணியில் ஈடுப்பட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இந்திய அணி சென்றுள்ள நிலையில், தோனி ராணுவப் பயிற்சியை மேற்கொள்ள சென்றுள்ளார். காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் இணைந்து அவர் பயிற்சி பெற்று வருகிறார். 
இதையடுத்து பாராசூட்டில் இருந்து கீழே குதிப்பதற்கான பயிற்சியை தோனி பலமுறை மேற்கொண்டார். இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் உள்ள விக்டர் படையுடன் தோனி இணைந்துள்ளார். 
 
வருகிற 15 ஆம் தேதி வரை அவர் காஷ்மீரில் பணியில் ஈடுபட உள்ளார். ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மற்ற வீரர்களுடன் இணைந்து அவர் மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :