வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (09:11 IST)

நாளை முதல் ஒருநாள் போட்டி – இந்திய அணியில் நீடிக்கும் பிரச்சனை

நாளை வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டித் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியில் நான்காவதாக யாரை இறக்குவது என்ற குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது.

யுவ்ராஜ் மற்றும் ரெய்னா விலகலுக்குப் பிறகு இந்திய அணியில் யாரை நான்காவது பேட்ஸ்மேனாக இறக்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இதற்காக உலகக்கோப்பைக்கு ஓராண்டுக்கு முன்பே அம்பாத்தி ராயுடு, தோனி, ராகுல், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ரிஷப் பண்ட், மனீஷ் பாண்டே, விஜய் ஷங்கர் ஆகிய அனைவரையும் பரிசோதனை செய்து பார்த்தனர் கோஹ்லியும் ரவி சாஸ்திரியும். ஆனாலும் நிலையான வீரரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உலகக்கோப்பை தொடரில் விஜய் ஷங்கர், ராகுல் மற்றும் பண்ட் ஆகியோரை மாற்றி மாற்றி இறக்கினர். இதில் ரிஷப் பண்ட் மட்டும் ஓரளவு சிறப்பாக விளையாடினார்.

வெஸ்ட் இண்டீஸுடனான டி 20 தொடரில் ரிஷப் பண்ட் முதல் இருப் போட்டிகளில் சொதப்ப மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் நாளைத் தொடங்கவுள்ள போட்டியில் கூட நான்காவது இடத்துக்கு கே எல் ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரெயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே போன்றோரில் யாரை இறக்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இதில் ஓரளவு சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பண்ட்டுக்கே அந்த இடம் இன்னும் சில நாட்களுக்கு பரிசோதனை அடிப்படையில் தரப்படும் எனத் தோன்றுகிறது.