திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (17:22 IST)

’தளபதி’ மேல கைய வெச்சா.. ‘தல’ துவம்சம் பண்ணுவார்!? – நாளைக்கு மேட்ச் அதிரடிதான்..!

Kohli Dhoni
நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி ஆர்சிபி அணியிடையே மோதல் எழுந்த நிலையில் நாளை நடக்க உள்ள சிஎஸ்கே – லக்னோ அணி மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் மேட்ச்சில் எதிர்பார்ப்பை மீறி பழைய வன்மங்களுக்கு விராட் கோலி பழி தீர்க்க, அதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற கௌதம் கம்பீர் கோலியிடம் எகிறிக் கொண்டு செல்ல கொஞ்ச நேரத்தில் மைதானமே களேபரமானது. இதில் விராட் கோலிக்கும், கௌதம் கம்பீருக்கும் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

’கிரிக்கெட்ல எதுக்குப்பா இப்படி சண்டையெல்லாம்?’ என சிலர் கேட்டாலும், ஆர்சிபி ரசிகர்கள் பலர் நேற்றைய சம்பவத்தை பர்சனலாக எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதில் கோலி செய்ததுதான் தவறு என லக்னோ ரசிகர்கள் ஒரு பக்கம் போஸ்ட் போட ஆர்சிபி – லக்னோ ரசிகர்களிடையே சோசியல் மீடியாவில் வாக்குவாதம் தொடங்கிவிட்டது.

Kohli


இந்நிலையில்தான் லக்னோ அணியுடன் நாளை மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு “தல” தோனி என்றால் தளபதியாக இருப்பவர் விராட் கோலி. விராட் கோலியே தோனியின் தீவிர ரசிகர்தான். சிஎஸ்கேவுடனான மேட்ச்சில் கூட சென்னை அணி ஆர்சிபியை பந்தாடிய போதும் கேஷூவலாக சிரித்துக் கொண்டு தோனியிடம் ஓடியவர் விராட் கோலி.

அப்படி பட்ட சிஷ்யனை சீண்டிய லக்னோ அணியைதான் தோனியின் சிஎஸ்கே அணி நாளை எதிர்கொள்ள உள்ளது. சாதாரண நாட்களாய் இருந்தால் ஆர்சிபி ரசிகர்களும், சிஎஸ்கே ரசிகர்களும் எதிரெதிரே நின்று அடித்துக் கொள்வதும் “கண்ணன் தேவன் டீ பொடி சிஎஸ்கே பொடி பொடி” என்று கூவுவதும் வாடிக்கை.

Kohli Dhoni


ஆனால் இந்த முறை ஆர்சிபி ரசிகர்களே இறங்கி வந்து சிஎஸ்கேவோடு சேர்ந்து கொண்டு “தளபதி (கோலி)ய உரசிட்டாங்க.. அவங்கள விடாதீங்க தல” என தோனிக்கு ரெக்வெஸ்ட்டுகளை பறக்கவிட தொடங்கியுள்ளனர். அமைதியின் உருவமான லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் மீது யாருக்கும் எந்த வன்மமும் இல்லாவிட்டால் கூட கௌதம் கம்பீரால் RCB ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

முதல் பாதி லீக் போட்டிகளில் ஏற்படாத பரபரப்புகள் அடுத்த பாதியில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாளைய போட்டியில் சிஎஸ்கேவின் வெற்றி சிஎஸ்கேவுக்கு மட்டுமல்ல பழி தீர்க்க காத்திருக்கும் ஆர்சிபி ரசிகர்களுக்குமே வெற்றியாக அமையும். ஆனால் அந்த வெற்றி சாத்தியம்தானா என்பதை பொறுத்திருந்து நாளைதான் பார்க்க வேண்டும்.