1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. CSK v LSG match preponed at may 3

சிஎஸ்கே போட்டி தேதி திடீர் மாற்றம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! – காரணம் என்ன?

CSK match change
சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே நடக்க இருந்த ஐபிஎல் லீக் போட்டி திடீரென தேதி மாற்றப்பட்டுள்ளது.

16வது ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் லீக் போட்டிகளில் 10 அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளில் வரும் மே 4ம் தேதி மாலை 3.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதும் லீக் போட்டி லக்னோவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 3ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை அணி கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோவை பந்தாடி வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க லக்னோ முயலுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது.

இந்நிலையில் மே 4ம் தேதி நடக்க இருந்த சிஎஸ்கே – லக்னோ லீக் போட்டி முன்கூட்டியே மே 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் மே4ம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் போட்டிகள் முன்கூட்டியே நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே போட்டி நடைபெறுவது டிவியில் பார்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், பலர் இந்த மேட்ச்சை மைதானத்தில் காண திட்டமிட்டு பயண டிக்கெட் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்பே போட்டி நடப்பது சற்று அதிர்ச்சியை அளித்துள்ளது.

Edit by Prasanth.K
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அவங்க ரெண்டு பேரும் இருந்திருந்தா 18 ஓவர்லயே முடிச்சிருப்பாங்க… தோனி பாராட்டு!