கோலி கம்பீர் மோதல்… பொங்கியெழும் கன்னடிகாஸ்- கர்நாடகா தேர்தலில் பிரதிபலிக்குமா?
நேற்று லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு கம்பீர் மற்றும் கோலி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டி முடிந்ததும் லக்னோ அணியின் வீரர் கைல் மேயர்ஸ், கோலியிடம் போட்டி முடிந்த பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, அவரை அங்கிருந்து கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் கம்பீர். இதனால் கோபமான கோலி ஏதோ சொல்ல, உடனடியாக கம்பீரும் வார்த்தைகளை விட, இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர். பின்னர் கே எல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி பிரித்து அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இந்த மோதலை கன்னட மக்கள் வெறுமென கிரிக்கெட் வீரர்களுக்கு இடையிலான மோதலாக மட்டும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. பாஜக எம் பியான கவுதம் கம்பீர் தங்கள் டீமையும், தங்களையும் அவமதித்து விட்டதாக டிவிட்டரில் பலரும் பொங்கி எழுந்து வருகின்றனர். பலரும் இதை விரைவில் நடக்க இருக்கும் கர்நாடகா சட்டசபை தேர்தலோடும் முடிச்சு போட்டு ட்வீட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.