1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (17:09 IST)

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம்

India -australia test
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்  121 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முன்ணிலையில் உள்ளது. இந்த நிலையில், ஐசிசி கிரிக்கெட் அமைப்பு இன்று டி-20 மற்றும் டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு மே முதல் மே 2022 ஆம் ஆண்டு வரை போட்டிகளின் முடிவுகள் சதவீதமும், நடப்பு சீசனில் நடைபெற்ற போட்டிகள் முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதனடிப்படையில், புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி அமைப்பு.

இதில், டி-20 போட்டியில் இந்திய அணி முதலிடமும், இங்கிலாந்து அணி 2 வது இடத்திலும் உள்ளது.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 121 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணியை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி 2 வது இடம் பிடித்துள்ளது.