தொடர்புடைய செய்திகள்
- கோலிய சீக்கிரம் அவுட் ஆக்குனாதான் மேட்ச்ல இருக்க முடியும்.. ஆஸி அணிக்கு பின்ச் அட்வைஸ்!
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஜெயிக்கப் போவது யார்? புதிய புரோமோ வெளியீடு
- சமந்தா நடிக்கும் ஆங்கில படத்தின் தலைப்பு அறிவிப்பு!
- இயக்குனர் மணிரத்னம் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாய்பிளக்கும் கோலிவுட்!
- உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : நடுவர்களை அறிவித்த ஐசிசி
‘ஆஸி ஜெயிக்கும்னு நிறைய பேர் சொல்றாங்க… ஆனா இதுதான் நடக்கும்’- ரவி சாஸ்திரி கணிப்பு
ஐபிஎல் ஜுரம் அடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
இந்த போட்டியில் வெல்வதற்கு ஆஸி அணிக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்துகளைக் கூறிவருகின்றனர். ஏனென்றால் ஆஸ்திரேலியாவின் வானிலையும், போட்டி நடக்கும் லண்டன் ஓவல் மைதான வானிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. இது ஆஸி அணிக்கு பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் இந்திய அணியோ கடும் கோடையில் ஐபிஎல் விளையாடிவிட்டு இப்போது குளிர் பிரதேசமான இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதனால் வானிலை மாற்றத்தை வீரர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்ற கேள்வி உள்ளது.
ஆனால் இதுபற்றி வேறு விதமாக பேசியுள்ளார் முனனாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அவர் இதுபோன்ற புறக்காரணிகள் ஒருபுறம் இருந்தாலும் போட்டியன்று எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும் என கணித்துள்ளார்.