செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (14:49 IST)

டெஸ் கிரிக்கெட்டில் 11000 ரன்கள் சேர்த்து சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்!

டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த தற்கால தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஜோ ரூட். அயர்லாந்து அணிக்கு எதிராக தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 11000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் 11000 ரன்களை எட்டியவீரர் என்ற சாதனையை ரூட் படைத்துள்ளார். இப்போது அவருக்கு 32 வயது ஆகிறது. இந்த சாதனையை சச்சின் தன்னுடைய 34 ஆவது வயதில்தான் படைத்தார்.

சச்சினின் ஆல்டைம் அதிக ரன்களான இன்னும் அவருக்கு 4921 ரன்களே தேவை என்ற நிலையில் இன்னும் 5 வருடங்கள் அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடினால் கூட அந்த சாதனையை முறியடிக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடுவதற்காக ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் அதிகமாக கூட விளையாடாமல் கவனம் செலுத்தி வந்தார் ரூட் என்பது குறிப்பிடத்தக்கது.