ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 மே 2023 (18:05 IST)

உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : நடுவர்களை அறிவித்த ஐசிசி

icc
உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள  நிலையில், இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

இந்த இறுதிபோட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் விபரம் சமீபத்தில் வெளியான நிலையில்,  இந்த அணியின்  கேப்டனாக பேட் கம்மிங்ஸ்   நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, பிசிசிஐ, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான  15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது.

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை எதுவும் இந்திய அணி வெல்லாத நிலையில், இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இப்போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 13.2 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் வழங்கப்படவுள்ளது.

மேலும், இப்போட்டியில், நடுவர்களாக செயல்படவுள்ளவர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

அதில், கிறிஸ் கேப்னி ( நியூசிலாந்து)ம் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) கள நடுவர்களாகவும்,கெட்டில்பொரோக்( இங்கிலாந்து) டிவி நடுவராகவும், குமார் தர்மசேனா (இலங்கை) 4வது நடுவராகவும், ரிச்சி ரிச்சர்ட்சன் ( வெஸ்ட் இண்டீஸ்) போட்டி நடுவராக செயல்படுவார்ககள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.