புதன், 6 டிசம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (08:19 IST)

கோலிய சீக்கிரம் அவுட் ஆக்குனாதான் மேட்ச்ல இருக்க முடியும்.. ஆஸி அணிக்கு பின்ச் அட்வைஸ்!

உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள  நிலையில், இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. கடந்த முறை பைனலில் தோற்ற இந்திய அணி இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்லும் கனவோடு உள்ளது.

இந்த போட்டிக்காக இந்திய அணிக்கு முன்பாகவே இங்கிலாந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது ஆஸி அணி. அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் சிறிய பிரேக்குக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்த போட்டியில் ஆஸி அணி வெல்ல வேண்டுமென்றால் விரைவிலேயே கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என ஆஸி அணியின் முன்னாள் லிமிடெட் ஓவர் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார். இதுபற்றி அவர் “கோலி இப்போது இருக்கும் ஃபார்மில் அவரை சீக்கிரமே பேட் செய்ய வரவழைத்து அவுட் ஆக்கவேண்டும். இல்லையென்றால் இந்தியாவை வெல்வது எளிதல்ல” எனக் கூறியுள்ளார்.