புதன், 6 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (14:08 IST)

சமந்தா நடிக்கும் ஆங்கில படத்தின் தலைப்பு அறிவிப்பு!

நடிகை சமந்தா. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி மற்றும் சிட்டாடல் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இதற்கிடையில் சம்ந்தா மையோசிட்டிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சிகிச்சைக்குப் பின்னர் மீண்டுவந்தார்.

இந்நிலையில் இப்போது சமந்தா ஒரு ஆங்கில படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் அந்த படத்துக்கு சென்னை ஸ்டோரி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் எழுதிய ‘அரேஞ்ச்மெண்ட் ஆஃப் லவ்” என்ற நாவலை ஒட்டி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் நடிகர் விவேக் கல்ரா கதாநாயகனாக நடிக்கிறார்.  இயக்குநர் பிலிப் ஜான் இயக்க தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான குரு பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் சமந்தா துப்பறியும் நிபுணராக நடிக்கிறார்.