இயக்குனர் மணிரத்னம் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாய்பிளக்கும் கோலிவுட்!
சிறந்த இயக்குனரும், சிறந்த படைப்பாளியுமான மணிரத்தினம் பல்லவி அனுபல்லவி என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர், இதய கோவில், பகல் நிலவு, மெளனராகம், நாயகன்ம் தளபதி, ரோஜா, காற்றுவெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.
பழம் பெரும் இயக்குனர்களான கே. பாலச்சந்தர், பாலு மகேந்திரா வரிசையில் மணிரத்னம் தனது தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், சாமானிய மக்களின் நிலைப்பாடு, பழம்பெரும் புராண கதைகள் மற்றும் நகர்ப்புற வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு படத்திற்கு படம் வித்யாசம் காட்டுவார்.
கடைசியாக இவரது இயக்கத்தில் பிரம்மாண்டமாக பொன்னியின் செலவன் படம் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் மணிரத்தினம் ரூ. 140 கோடி சொத்து வைத்திருக்கிறராம். இவர் ஒரு படத்திற்கு 22 கோடி வரை சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.