தொடர்புடைய செய்திகள்
- உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி… வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே!
- உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு எப்போது? வெளியான தகவல்!
- இதெல்லாம் ஒரு சம்பளமா?... தேர்வுக்குழு தலைவருக்கு விண்ணப்பிக்காத சேவாக்!
- இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகிறாரா சேவாக்?
- உலகக்கோப்பை கிரிக்கெட் குவாலிஃபையர் போட்டி.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற அணி..!
பாகிஸ்தான் கோரிக்கையை ஐசிசி ஏற்காது… அஸ்வின் சொல்லும் காரணம்!
உலகக்கோப்பை 50 ஓவர் தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ளது. இந்த முறை முழுக்க முழுக்க அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இந்த தொடருக்கான வரைவு அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ ஐசிசிக்கு அனுப்பியது. அதை ஐசிசி அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த வரைவு அட்டவணைக்கு பாகிஸ்தான் சில போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் அணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் நடக்கும் போட்டிகளுக்கு எதிர்ப்பு வேறு மைதானத்தில் நடத்த சொல்லி கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் “பாகிஸ்தான் அணி சென்னையில் போட்டி நடந்தால் அது ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறது. ஆனால் பாதுகாப்பு பிரச்சனைகள் இருந்தால் இதுபோன்ற கோரிக்கையை ஐசிசி பரிசீலிக்காது. சென்னையில் இல்லாமல் வேறு இடத்தில் நடந்தால் அப்போது அது பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கும் அல்லவா” எனக் கூறியுள்ளார்.