செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 25 ஜூன் 2023 (09:33 IST)

உலகக் கோப்பை தகுதிச்சுற்று போட்டி… வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே!

13 ஆவது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வருகின்றன.

இந்த தொடரில் நேற்று ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டி  எதிர்பாராத அதிர்ச்சியான ஒரு முடிவைப் பெற்றுள்ளது. இரண்டு முறை உலகக் கோப்பை சாம்பியனனான வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வேயிடம் பரிதாபமாக 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 268 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோற்றது. ஜிம்பாப்வே அணியின் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி உலகக்கோப்பைக்குள் நுழைவது எளிதாகியுள்ளது.