1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Munaf patel appointed as Delhi capitals new bowling coach

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

ஐபிஎல் போட்டி
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிடல்ஸ். அதனால் இந்த ஆண்டு அந்த அணியில் புணரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லி அணியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலக்கப்பட்டு சஞ்சய் பாங்கர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த அணிக்கு ஒரு இந்திய வீரரைப் பயிற்சியாளர் ஆக்கவேண்டும் என்ற முடிவால்தான் பாண்டிங் விடுவிக்கப்பட்டார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் முனாஃப் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இருந்து ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் புதிய அணியை உருவாக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது தெரிகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!