தொடர்புடைய செய்திகள்
- கே எல் ராகுலே மோசம்… கோலியும் ரோஹித்தும் அவர விட மோசம்… இது என்னப்பா புது கணக்கா இருக்கே!
- அணியின் நன்மைக்காக விளையாடுபவர்களே வேண்டும்… ராகுலை சீண்டிய லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா
- சோஷியல் மீடியா விற்பன்னர்கள் இந்திய அணியைத் தேர்வு செய்வதில்லை… கே எல் ராகுல் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!
- கே.எல்.ராகுலை விடுவித்த லக்னோ அணி? தூண்டில் போட காத்திருக்கும் RCB!
- கே எல் ராகுலைக் கட்டம் கட்டி கலாய்த்த ஹர்ஷா போக்லே & ரவி சாஸ்திரி!
சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!
ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அவற்றில் சில அணிகளின் முடிவுகள் எதிர்பார்ப்பிற்கு மாறானவையாக இருந்தன.
இதில் கே எல் ராகுல் லக்னோ அணியால் கழட்டிவிடப்பட்டுள்ளது முக்கியக் கவனம் பெற்றுள்ளது. கடந்த சீசனில் ஒரு போட்டி முடிந்த போது கே எல் ராகுலை, அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடுமையாக பேசியது வீடியோவாக வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆனால் அதன் பின்னர் ராகுலை சந்தித்து சஞ்சீவ் கோயங்கா பேசியதால் இருவரும் சமாதானம் ஆகியதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் ராகுலைக் குறிப்பிடும் விதமாக சஞ்சீவ் கோயங்கா “நாங்கள் எப்படிப்பட்ட வீரர்களை அணியில் எடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டோம் என்றால் தங்கள் தனிப்பட்ட லாபத்துக்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக விளையாடும் தன்னலமற்ற வீரர்களைதான்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக கே எல் ராகுல் பேசியுள்ளார். அதில் “நான் எனக்கு எங்கே சுதந்திரமாக விளையாட முடியுமோ அங்கே செல்லவேண்டும் என ஆசைப்பட்டேன். சில நேரங்களில் நாம் முன்னோக்கி சென்று நமக்கு நன்மையான சில விஷயங்களை செய்துகொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்