திங்கள், 4 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (11:28 IST)

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக அவர் பயிற்சியாளராக பணியாற்றினார். டெல்லி  அணி கடந்த 7 சீசன் களாக சிறப்பாக செயல்பட்ட போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றும் குறிப்பாக கடந்த மூன்று சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு கூட டெல்லி அணியை கொண்டு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் டெல்லி அணியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அணிக்கு ஒரு இந்திய வீரரைப் பயிற்சியாளர் ஆக்கவேண்டும் என்ற முடிவால் பாண்டிங் விலகிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி அணியின் இயக்குனரான கங்குலி, அந்த அணிக்கு யுவ்ராஜ் சிங் அல்லது ரெய்னாவை பயிற்சியாளராக நியமிக்க வேண்டுமென விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.