1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Australian media project kohli face instead of rohith

ஆஸ்திரேலிய தொடர்… கோலியின் முகத்தை முன்னிலைப் படுத்தும் ஆஸி ஊடகங்கள்!

Gambhir
கோலி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலகக் கிரிக்கெட்டின் முகமாக இருக்கிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமையவில்லை. தன்னுடைய மோசமான ஃபார்மில் இருந்து திரும்பி கோலி கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார்.

விரைவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது. ஆனால் அவர் தன்னுடைய பழைய ஃபார்மை மீட்டெடுப்பார் என ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஊடகங்களோ கோலியின் முகத்தைதான் முன்னிலைப் படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய ஊடகங்கள் அனைத்தும் கோலியின் புகைப்படத்தைப் போட்டு அவர் குறித்து கட்டுரை எழுதி வருகின்றன. அதேபோல தொலைக்காட்சியிலும் ஆஸியின் சார்பாக பாட் கம்மின்ஸ் முகமும், இந்தியா சார்பாக கேப்டன் ரோஹித் ஷர்மாவின் முகத்துக்குப் பதிலாக கோலியின் முகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு!