1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Michael Vaughan thought india losing a match against australia

இந்தியாவை ஒரு அணியால் மட்டுமே வீழ்த்த முடியும்… இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் கருத்து!

இந்தியா
இந்த உலகக் கோப்பை தொடரில் அசுர பலத்தோடு வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்திய அணி. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

பலம் மிக்க அணிகளாக சொல்லப்பட்ட பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளை எளிதாக வென்று லீக் போட்டிகளில் தோல்வியே காணாத ஒரே அணியாக உள்ளது. இந்நிலையில் இந்திய அணியை இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியால் மட்டுமே வீழ்த்த முடியும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் தெரிவித்துள்ளார்.

அவர்து பேச்சில் “இந்திய அணியை ஆஸ்திரேலியாவால் மட்டுமே வீழ்த்த முடியும். அப்படி நடந்தால் என்னுடைய நண்பர் வாசிம் ஜாஃபருக்கு நான் ஒரு பரிசு தர காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். ஒருவேளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் மோதினால் அது 2003 ஆம் ஆண்டு தோல்விக்கு பதில் சொல்லும் விதமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
அரையிறுதி சவாலுக்கு தயாராக உள்ளோம்… கேன் வில்லியம்சன் கருத்து!