செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2023 (09:26 IST)

சிக்ஸர் மழையில் முதலிடம் பிடித்த 2023 உலகக் கோப்பை தொடர்!

சிக்ஸர் மழையில் முதலிடம் பிடித்த 2023 உலகக் கோப்பை தொடர்!
2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் போட்டிகள் வரும் நவம்பர் 12 ஆம் தேதியோடு முடியவுள்ளன. அதையடுத்து அரையிறுதிப் போட்டிகள் நடக்க உள்ளன. அரையிறுதிப் போட்டிகளுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் நான்காவது அணிக்கான போட்டியில் நியுசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் போட்டி போடுகின்றன.

இந்த தொடர் விறுவிறுப்பாகவும் அதிரடியாகவும் பல போட்டிகளால் இதுவரை நிரம்பியிருந்தது. இந்நிலையில் இதுவரை எந்தவொரு உலக கோப்பை தொடரிலும் நடக்காத ஒரு சாதனையாக இந்த தொடரில் 500 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக 463 சிக்ஸர் விளாசப்பட்டதே சாதனையாக இருந்தது. இந்நிலையில் இந்த தொடர் முடியும் முன்னரே 500 சிக்ஸர்களுக்கு மேல் விளாசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.