திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2023 (09:27 IST)

மீண்டும் இந்திய அணியில் புவனேஷ்வர் குமார்? ஆஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் புவனேஷ்வர் குமார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடியுள்ள இவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வகை போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க போட்டிகளை விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.

ஆனால் கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இவர் இந்திய அணியில் எடுக்கப்படவில்லை. அதனால் அவரின் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே கருதப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற இருக்கிறார். உலகக் கோப்பை முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியோடு டி 20 தொடரில் விளையாட உள்ளது. அந்த அணியில் புவனேஷ்வர் குமார் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.