செவ்வாய், 2 ஜூலை 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2023 (09:24 IST)

ஐசிசி தரவரிசை பட்டியலில் அதிக நாட்கள் முதலிடத்தில் இருந்த வீரர் யார் தெரியுமா?

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் அவர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதன் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதலிடம் வகித்து வந்த பாபர் ஆசாம் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் இதுவரை அதிக நாட்கள் நம்பர் 1 இடத்தில் இருந்த ஐந்து வீரர்களைப் பற்றி பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ். அவர் மொத்தம் 1748 நாட்கள் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருந்துள்ளார். அடுத்து ஆஸி அணியின் மைக்கேல் பெவன் 1259 நாட்கள் முதலிடத்தில் இருந்துள்ளார். அதற்கடுத்த மூன்றாம் இடத்தில் இந்திய வீரர் விராட் கோலி 1258 நாட்களும், ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ் 1146 நாட்களும்,  வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா 1049 நாட்களும் முதலிடத்தில் இருந்துள்ளனர்.