1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (07:21 IST)

ஒரே ஸ்பெல்லில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கை நிலைகுலைய வைத்த குல்தீப் யாதவ்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் நான்கு போட்டி நேற்று ரிசர்வ் நாளில் மீண்டும் தொடங்கியது. பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி மேற்கொண்டு விக்கெட்டே இழக்காமல் 356 ரன்களை சேர்த்தது. இந்திய பேட்ஸ்மேன்களான கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி அதிரடி சதம் அடித்தனர். கோலி 122 ரன்களும், கே எல் ராகுல் 111 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணி 128 ரன்கள் மட்டுமே சேர்த்து 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த இன்னிங்ஸில் பாகிஸ்தான் பேட்டிங்கை நிலைகுலைய வைக்கும் விதமாக அமைந்தது சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்வின் பந்துவீச்சு.

8 ஓவர்கள் வீசிய அவர் 25 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். பாகிஸ்தான் அணியின் பினவரிசை பேட்ஸ்மேன்கள் அனைவரையும் அவர் காலி செய்ய இந்திய அணியின் வெற்றி எளிதானது.