1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 11 செப்டம்பர் 2023 (16:48 IST)

ரிசர்வ் தினத்திலும் மழை.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

India Pakistan
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் மழை பெய்ததால் பாதையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது 
 
 இதனை அடுத்து ரிசர்வ் தினமான இன்று இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்  போட்டியில் நடைபெறும் நேரம் வந்துவிட்ட நிலையில் இன்னும் மைதானத்தில் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்காமல் உள்ளது. 
 
நேற்று இந்தியா அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு  147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த ஆட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் மழை பெய்து கொண்டிருப்பதால் போட்டியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  
 
இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா? அல்லது இன்றும் போட்டி ரத்து செய்யப்பட்டு தலா ஒரு புள்ளி வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி போட்டி தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது,.
 
Edited by Siva