1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (16:21 IST)

'புஷ்பா 2' பட ரிலீஸ் தேதி அப்டேட் கூறிய அல்லு அர்ஜூன்

pushpa 2
புஷ்பா 2 வது பாகத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் அல்லு அர்ஜூன் அறிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்தது.

உலகம் முழுவதும்  வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்ற புஷ்பா படத்தில்  2வது பாகம்  திரைப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில்  பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தில் இல்லாத சில புதிய நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த  நிலையில்,  இந்த படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 1000 கோடிக்கு வாங்க கோல்ட் மைன் என்ற இந்தி மொழி தயாரிப்பு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த  நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் அல்லு அர்ஜூன் இன்று தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, அடுத்தாண்டு(2024) ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புஷ்பா 1 படத்திற்காக தெலுங்கு சினிமாவின் முதல் தேசிய விருது பெற்ற முதல் நடிகர் அல்லுஅர்ஜூன் என்பது குறிப்பிடத்தக்கது.