புதன், 18 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (07:19 IST)

பாகிஸ்தானை 128 ரன்களில் சுருட்டிய பவுலர்கள்… இந்தியா அபார வெற்றி!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் நான்கு போட்டி நேற்று ரிசர்வ் நாளில் மீண்டும் தொடங்கியது. பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி மேற்கொண்டு விக்கெட்டே இழக்காமல் 356 ரன்களை சேர்த்தது.

இந்திய பேட்ஸ்மேன்களான கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி அதிரடி சதம் அடித்தனர். கோலி 122 ரன்களும், கே எல் ராகுல் 111 ரன்களும் சேர்த்தனர்.

இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியை ஆரம்பம் முதலே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்தனர் இந்திய பவுலர்கள். விக்கெட்கள் சரசரவென விழுந்த வண்ணம் இருந்த நிலையில் பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 122 ரன்களை சேர்த்து 8 விக்கெட்களை இழந்தது. அந்த அணியின் ஹாரிஸ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகிய இருவரும் காயம் காரணமாக பேட் செய்ய வரவில்லை. இதனால் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.