வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (18:10 IST)

களமிறங்கிய 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. 300 ரன்களை தாண்டுமா இந்தியா?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது 
 
இதில் களமிறங்கிய நான்கு இந்திய பேட்ஸ்மேன்களும் அரை சதம் அடித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நேற்று ரோகித் சர்மா மற்றும்  சுப்மன் கில் ஆகிய இருவரும் அரைசதம் அடித்த நிலையில் தற்போது விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் அரைசதம் அடித்துள்ளனர். மேலும் இருவருமே  சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்
 
விராத் கோஹ்லி 80 ரன்களும்,  கே எல் ராகுல் 84 ரன்கள் அடித்துள்ளனர். இந்திய அணி 44 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 300 ரன்கள் நிச்சயம் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran