வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (08:03 IST)

கோலியை உட்கார வைத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கிய ரோஹித் ஷர்மா!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி அதிருப்தியளிக்கும் வகையில் முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதையடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 23 ஓவர்கள் மட்டுமே விளையாடி 114 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த போட்டியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் மற்றும் ரவீந்தர ஜடேஜா 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையைக் கலைத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார் ரோஹித் ஷர்மா.

தான் ஓப்பனிங் இறங்காமல் இஷான் கிஷானோடு ஷுப்மன் கில்லை இறக்கிய அவர், அடுத்தடுத்து சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவிந்தர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் என வீரர்களைக் களமிறக்கினார். அதன் பின்னர் ஏழாவது பேட்ஸ்மேனாக தான் இறங்கி ஆட்டத்தை முடித்தார். இந்த போட்டியில் இந்திய அணி வீரர் கோலி களமிறக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.