வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (21:17 IST)

''தமிழ் சினிமா நடிகர்களுக்கு குறுகிய மனப்பான்மை''...பவன் கல்யாண் பேச்சுக்கு நடிகர் நாசர் பதிலடி

தமிழ் சினிமா உலகினர் குறுகிய மனப்பான்மையுடன் உள்ளனர் என்றும் அவர்கள் அந்த மனப்பான்மையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றும் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தெரிவித்ததற்கு  நடிகர் நாசர் பதிலடி கொடுத்துள்ளார்.

பவன் கல்யாண் பேச்சுக்கு நடிகர் நாசர் பதிலளித்துள்ளார். இவர் கூறியதாவது:

‘’தமிழ் சினிமாவில் பிற மொழி கலைஞர்களை பயன்படுத்தப்போவதில்லை என்ற கருத்து தவறானதாகும். தற்போதைய சூழலில் பான் இந்தியா படங்கள் நல்லவரவேற்பை பெற்று வருவதால், அனைத்து மொழிப் படங்களிலும் பிற மொழி கலைஞர்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனால், தமிழ் சினிமா பிற மொழிக் கலைஞர்கள் மற்றும்  நடிகர்களின் திறமையை எப்போதும் மதிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.