எளிய இலக்கை போராடி வென்ற இந்தியா… போர் அடித்த முதல் ஒருநாள் போட்டி!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி அதிருப்தியளிக்கும் வகையில் முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதையடுத்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் வெறும் 23 ஓவர்கள் மட்டுமே விளையாடி 114 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த போட்டியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் மற்றும் ரவீந்தர ஜடேஜா 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி இந்த எளிய இலக்கை 5 விக்கெட்கள் இழந்து 22.5 ஓவர்களில் எடுத்தது. இந்திய அணி சார்பில் இஷான் கிஷான் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 4 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.