வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (22:19 IST)

ICC Worldcup: இந்தியா -பாகிஸ்தான் போட்டியை காண மருத்துவமனையை புக் செய்த ரசிகர்கள்

india fans
ICC Worldcup உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுவதை நேரில் காண ரசிகர்கள் வித்தியாசமான முடிவெடுத்துள்ளனர்.

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது.

இந்தியா- பாகிஸதான் இடையே வரும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்கவுள்ளது. ஆனால், இந்தியாவில் நவராத்தி தினம் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்கான ஒரு நாள் முன்பதாக இப்போட்டி நடக்க ஆலோசனை வழங்கப்பட்டதாக  தகவல் வெளியானது.

இதுபற்றி கூறிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, திட்டமிட்டபடி அக்டோபர் 15 ஆம் தேதி போட்டி நடக்கும் என்றும் தேதி மாற்றம் பற்றி முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அக்டோபர் 15 ஆம் தேதி நடக்கவுள்ள போட்டில் குஜராத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடக்கவுள்ளது.  இப்போட்டியை நேரில் காண, உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அங்குள்ள ஹோட்டல் அறைகளை புக் செய்து வருகின்றனர். இதையறிந்த ஓட்டல் நிர்வாகம் அறைக்கான விலையை அதிகரித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் புத்திசாலித்தனமாக, அங்குள்ள தனியார் மருத்துவமனைகளை புக் செய்து வருகின்றனர். இதுபற்றி அங்குள்ள மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர், இந்த செயலாளர் ரசிகர்களுக்கு இரண்டு நன்மைகள், ஒன்று: அவர்களின் உடலை செக் செய்து கொள்ளலாம்; இன்னொன்று விலை குறைவு என்று கூறியுள்ளார்.

உலகமே எதிர்பார்க்கும் போட்டிகளில் ஒன்று இந்தியா- பாகிஸ்தான் மேட்ச் ஆகும்.