ICC Worldcup: இந்தியா- பாகிஸ்தான் தேதி மாற்றமா? பிசிசிஐ செயலாளர் விளக்கம்
ICC Worldcup உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான தேதி மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், இதை ஐசிசி மறுத்துள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது.
இந்த உலககோப்பையில் விளையாட தகுதிச்சுற்று சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணி தகுதி பெற்றுள்ள நிலையில் முழுமையான அட்டவணையை ஐசிஐசி வெளியிட்டிருந்தது
இதன்படி அக்டோபர் ஐந்தாம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி தொடங்க உள்ளது. கடைசி லீக் போட்டி நவம்பர் 12ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது
முதல் செமி பைனல் நவம்பர் 15ஆம் தேதியும் இரண்டாவது செமி பைனல் நவம்பர் 16ஆம் தேதி இறுதி போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தியா- பாகிஸதான் இடையே வரும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்கவுள்ளது. ஆனால், இந்தியாவில் நவராத்தி தினம் என்பதால், பாதுகாப்பு காரணங்களுக்கான ஒரு நாள் முன்பதாக இப்போட்டி நடக்க ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுபற்றி கூறிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, திட்டமிட்டபடி அக்டோபர் 15 ஆம் தேதி போட்டி நடக்கும் என்றும் தேதி மாற்றம் பற்றி முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.