1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kohli climb up in ICC T 20 Ranking

ஐசிசி தரவரிசையில் கோலி முன்னேற்றம்… ஆசியக் கோப்பை சதம் எதிரொலி!

கோலி
இந்திய அனியின் நட்சத்திர வீரர் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்த சீரிஸ் தற்போது ஐசிசி தரவரிசையில் எதிரொலித்துள்ளது. கோலி, 33 ஆவது இடத்தில் இருந்து 18 இடங்கள் முன்னேறி 14 இடத்துக்கு சென்றுள்ளார். விரைவில் அவர் மீண்டும் 10 ஆவது இடத்துக்குள் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
RCB அணிதான் காரணம்… இந்திய அணியில் தேர்வானது குறித்து தினேஷ் கார்த்திக் ட்வீட்!