திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (13:43 IST)

ராகுல் காந்தியின் நடைப்பயணம் திடீர் நிறுத்தமா? காங்கிரஸ் விளக்கம்!

Rahul
ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று நடைபெறாத நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமையை நடைபயணம் என்ற பயணத்தை தமிழகத்திலிருந்து ஆரம்பித்தார் என்பதும் தற்போது அவர் கேரளாவில் நடை பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று இரவு சாத்தனூர் பொதுக்கூட்டத்துடன் ஏழாவது நாள் நடை பயணத்தை ராகுல் காந்தி முடிந்து விட்ட நிலையில் இன்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
எனவே இன்று ராகுல் காந்தி முழு ஓய்வு எடுப்பார் என்றும் இன்று நடை பயணத்தில் அவர் ஈடுபட மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நாளை முதல் அவர் மீண்டும் தனது நடை பயணத்தைத் தொடங்குவார் என்று திட்டமிட்டபடி 3600 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெறும் என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.