செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (19:56 IST)

போயிட்டு வரேன் மக்களே..! விடை பெறுகிறார் ரோஜர் பெடரர்!

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள டென்னிஸ் வீரர்களில் நம்பர் 1 வீரராக அறியப்படுபவர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ரோஜர் பெடரர். இதுவரை 20 க்ராண்ட்ஸ்லாம், 8 விம்பிள்டன் உள்பட பல கோப்பைகளை வென்றுள்ள ரோஜர் பெடரர் 310 வாரங்கள் தொடர்ந்து தரவரிசையில் நம்பர் 1 இடமும் பெற்றவர் ஆவார்.

க்ராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பிரபலமான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, விம்பிள்டன், பிரெஞ்ச ஆகிய 4 இடங்களில் வென்ற 7 ஆண் வீரர்களில் ஒருவர் ரோஜர் பெடரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2022 லெவர் கோப்பைக்கு பிறகு தான் ஓய்வு பெற உள்ளதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.