1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (07:48 IST)

இன்றைய சூப்பர் 4 போட்டி.. இந்தியா - இலங்கை மோதல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது யார்?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்றைய சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா அபார வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளன. 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்தியா இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளில் இரண்டு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணியை இந்தியா வீழ்த்திவிட்டால் இறுதிப் போட்டியிலும் இந்தியா பாகிஸ்தான் மோதுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva