தொடர்புடைய செய்திகள்
- சூர்யகுமாருக்கு குறிவைக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்? - கேப்டன் பதவி வழங்குவதாக டீலிங்!
- ரோஹித் ஷர்மா எதிர்பார்ப்பதை செய்யாவிட்டால் அவ்வளவுதான்… முகமது ஷமி பகிர்ந்த தகவல்!
- ஒரு தொப்பி இத்தனை கோடியா? ஏலத்தில் விடப்பட்ட இண்டியானா ஜோன்ஸின் தொப்பி!
- ஆர் சி பி அணிக்காக விளையாட ஆசை… ரிங்கு சிங் ஓபன் டாக்!
- பஞ்சாப் கிங்ஸ் பங்குகளை விற்க திட்டமிட்ட சக உரிமையாளர்!? - நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா!
ரோஹித் ஷர்மாவை ஏலத்தில் எடுக்க 50 கோடி ரூபாய் வரை செலவு செய்யத் தயாராகும் அணிகள்!
இந்திய கிரிக்கெட்டில் உருவான மிகச்சிறந்த கேப்டன்கள் வரிசையில் இணைந்துள்ளார் ரோஹித் ஷர்மா. சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பையில் அவர் தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.
இந்நிலையில் ரோஹித் ஷர்மா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. 10 ஆண்டுகளுக்கு மேல் அந்த அணிக்குக் கேப்டனாக இருந்த ரோஹித் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் திடீரென அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். அதனால் அடுத்த சீசனில் ரோஹித், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
இப்படிப்பட்ட நிலையில் திடீரென அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். அதனால் அடுத்த சீசனில் ரோஹித், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
அதனால் அவர் ஏலத்தில் வரும் பட்சத்தில் அவரை எத்தனைக் கோடி கொடுத்து வேண்டுமானாலும் தங்கள் அணிக்காக எடுக்க லக்னோ உள்ளிட்ட அணிகள் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. அவரை எடுக்க 50 கோடி ரூபாய் வரைக் கொடுக்க முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்