1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. K L Rahul getting chance influenced by Rahul dravid

டிராவிட்டின் தயவால் அணியில் நீடிக்கிறாரா கே எல் ராகுல்… ரசிகர்கள் கொந்தளிப்பு!

இந்தியா
கே எல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஃபார்மில் இருந்தாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான கே எல் ராகுக் மீது கடும் விமர்சனங்கள் எழும் அளவுக்கு அவரின் பார்ம் உள்ளது. கிட்டத்தட்ட 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அவர் சராசரியாக 33 மட்டுமே வைத்துள்ளார்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் இந்தளவுக்குக் குறைவான சராசரி யாருக்கும் இல்லை. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்கள் இருக்கும் நிலையில் கே எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிப்பது ஏற்புடையதில்லை எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸி. அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள நிலையில், கே எல் ராகுலிடம் இருந்த துணைக் கேப்டன் பொறுப்பு நீக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான துணைக் கேப்டன் என பிசிசிஐ யாரையுமே அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ராகுல் அளவுக்கு மோசமாக விளையாடி இருந்தால், அவர் அணியில் இருந்திருக்கவே மாட்டார் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் பயிற்சியாளர் டிராவிட்டும், கே எல் ராகுலும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் தரப்படுவதாகவும் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பெண்கள் டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு..!