1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2023 (14:13 IST)

தெலங்கானாதான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான்; கேசிஆர் தான் தலிபான் - ஒய்.எஸ்.ஷர்மிளா கடும் விமர்சனம்!

sharmila
தெலுங்கானா தான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தான் தாலிபான் என்றும் ஆந்திர மாநில முதல்வரின் சகோதரி ஒய்எஸ் ஆர் ஷர்மிளா தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 கடந்த சில நாட்களாக தெலுங்கானா அரசை எதிர்த்து ஷர்மிளா தீவிரமாக அரசியல் செய்து வருகிறார் என்பதும் சமீபத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் என்னை பார்த்து பயப்படுகிறார் என்று இதன் மூலம் தெளிவாக தெரிகிறது என்றும் எனது நடைப்பயணம் 3000 கிலோமீட்டர் தூரம் கடந்து உள்ளது என்றும் சந்திரசேகர் ராவ் தரப்பினர் இதை முறியடிக்க முயற்சி செய்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
நான் அரசியலுக்கு வந்து நடைபயணம் தொடங்கியதில் இருந்தே ஆளுங்கட்சி தலைவர்கள் என்னை தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்கள் என்றும் சந்திரசேகர் ராவ் ஒரு சர்வாதிகாரி என்றும் தெலுங்கானா தான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கடுமையான விமர்சனம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva