1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2023 (09:06 IST)

ஆட்டநாயகன் விருது… கோலியை முந்தி சச்சினை நோக்கி செல்லும் ஜடேஜா!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்கள் வீழ்த்திய ரவீந்தர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஜடேஜா முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா வாங்கியுள்ள ஒன்பதாவது ஆட்டநாயகன் விருது இதுவாகும். இந்திய வீரர்களில் தற்போது விளையாடுபவர்களில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றவராக ஜடேஜா சாதனைப் படைத்துள்ளார். அவருக்கு முன்பாக சச்சின் 14 முறையும், டிராவிட் 11 முறையும் இந்த விருதை பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.