1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 20 பிப்ரவரி 2023 (08:06 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. கேப்டன் மாற்றம்..!

india
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது என்பதும் தெரிந்தது. 
 
மேலும் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட உள்ள நிலையில் அடுத்ததாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மார்ச் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. 
இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ரோஹித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்காத நிலையில் ஹர்திக் பாண்டியா அந்த ஒரு போட்டியில் மட்டும் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர்கான இந்திய அணி முழு விவரம் இதோ: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.
 
Edited by Siva