திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (14:42 IST)

100 மீட்டருக்கு மேல அடிச்சா எக்ஸ்ட்ரா ரன் குடுங்க! – கே.எல்.ராகுல் கோரிக்கை!

இன்று ராயல் சேலஞ்சர்ஸோடு மோத உள்ள பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் 100 மீட்டருக்கு அதிகமான சிக்ஸர்களுக்கு கூடுதல் ரன் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஐபிஎல் சீசனின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து இரண்டாவது சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் முதல் சுற்றில் 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் அணி வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியை கிங்ஸ் லெவன் எதிர் கொள்ள உள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கே.எல்.ராகுல் நகைச்சுவையாக “இன்றைய ஆட்டத்தில் டி வில்லியர்ஸையும், கோலியையும் நீக்கி விட வேண்டும்” என கூறியுள்ளார். மேலும் 100 மீட்டர்களுக்கு மேல் உயரமாக அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு கூடுதல் ரன்கள் அளித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.