டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நேற்றைய போட்டியில் காயமடைந்ததால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி பெற்று மீண்டும் முதலிடத்தைப் பெற்றது. நேற்றைய போட்டியில் பீல்டிங் செய்யும் போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்தை தடுக்க முயன்ற போது இடது தோள்பட்டையில் அடிபட்டது. அதனால் அவர் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். காயத்தின் தன்மை தெரியாததால் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா...