பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!
நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான டி20 போட்டியில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்க வீரர் இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தால் (77 ரன்கள்) 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 32 ரன்கள் எடுத்து பலம் சேர்த்தார்.
176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. முதல் இரண்டு ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்த அந்த அணி, 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இது பாகிஸ்தான் அணியின் இரண்டாவது மிக மோசமான தோல்வியாக பதிவாகியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று, குரூப் 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, சூப்பர் 8 சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றது.
இந்தியா vs பாகிஸ்தான், கிரிக்கெட் செய்திகள், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டி20 உலகக்கோப்பை, இந்திய வெற்றி, சூப்பர் 8 தகுதி
Edited by Siva