செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2020 (18:11 IST)

அடுத்த போட்டியில் களமிறங்குகிறார் யுனிவர்சல் பாஸ்- ஆர்சிபி அணிக்கு கிலி!

பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் அடுத்த போட்டியில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

ஆர் சி பி அணியின் தூணாக இருந்த கிறிஸ் கெய்ல் கடந்த ஆண்டு பஞ்சாப் அணியால் வாங்கபட்டார். அந்த அணியில் தன் பங்குக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்துக் கொடுத்தார். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 7 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இதுவரை ஒரு போட்டியில் கூட அவர் விளையாட முடியவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் சில பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்பட்டது.

இப்போது அதிலிருந்து அவர் மீண்டு விட்டதாகவும், அவர் அடுத்த போட்டியில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது. அடுத்த போட்டியில் பஞ்சாப் அணி ஆர் சி பி அணிக்கு எதிராக விளையாட உள்ளது. தன்னைக் கழட்டிவிட்ட ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் அவர் விஸ்வரூபம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது