ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 8 மே 2024 (07:53 IST)

22 வயதில் இப்படி ஒரு சாதனையா?.. 17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஜேக் மெக்ருக் படைத்த மைல்கல்!

நேற்று நடந்த 56 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற அந்த அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் ப்ரேஸர் மெக்ரூக்கின் அதிரடி அரைசதமும் ஒரு காரணம்.

தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய அவர் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதுவரை அவர் மூன்று முறை 20 பந்துகளுக்குள் அரைசதம் அடித்து ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். இத்தனைக்கும் இதுதான் அவர் விளையாடும் முதல் ஐபிஎல் தொடர்.

இதுவரை நிறைய வீரர்கள் 20 பந்துகளுக்குள் அரைசதம் அடித்துள்ளார்கள். ஆனால் மூன்று முறை அடித்தது மெக்ருக் மட்டும்தான். இதுவரை நிக்கோலஸ் பூரன், ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், இஷான் கிஷன், சுனில் நரேன் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் இரண்டு முறை 20 பந்துகளுக்குள் இரண்டு முறை அரைசதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.