வியாழன், 3 ஏப்ரல் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 மார்ச் 2025 (12:51 IST)

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

CSK vs RCB

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் சிஎஸ்கே வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.

 

ஐபிஎல் போட்டிகளில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிக்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் சுவாரஸ்யமாக காணப்படும் இந்த போட்டியில் இரு அணி ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வது அதிகம்.

 

இந்நிலையில் தற்போது இன்றைய போட்டி குறித்து சிஎஸ்கே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் லியோ மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்குகிறது. எதற்காக என அங்கிருப்பவர்கள் கேட்கும்போது, பெங்களூரில் இருந்து விருந்தாளிங்க வராங்க என சொல்கிறது. ஒருவர் அதிர்ச்சியாய் “அவைங்களா?” என கேட்கிறார்.

 

பின்னர் என்றும் அன்புடன் பேனர் அருகே ராயல் சேலஞ்சர்ஸ் வீரரை லியோ வரவேற்கிறது. இரு அணிகள் இடையே உள்ள பங்காளி சண்டையையும், அதேசமயம் அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக உள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K