வெள்ளி, 28 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 28 மார்ச் 2025 (08:41 IST)

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று பார்டர்- கவாஸ்கர் தொடரில் விளையாடியது. அதில் 3-1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அந்த தொடரில் மோசமாக விளையாடினார் ரோஹித் ஷர்மா. இதனால் அவர் இனிமேல் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற மாட்டார் எனவும், டெஸ்ட் கேப்டன்சி அவரிடம் இருந்து பும்ராவுக்கு கைமாற்றப்படும் எனவும் தகவல் பரவியது.

இந்நிலையில்  ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ரோஹித் ஷர்மாவே அந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்தட்டும் என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.