திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 8 மே 2024 (07:43 IST)

மீண்டும் ஒரு சர்ச்சை… சஞ்சு சாம்சன் அவுட்டில் ரசிகர்கள் அதிருப்தி… ஒரு தலைப் பட்சமாக நடந்துகொண்டனரா நடுவர்கள்?

நேற்று நடந்த 56 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தபோட்டியில் டெல்லி அணி முதலில் பேட் செய்ய அந்த அணியின் ஜேக் ப்ரேஸர் மெக்ருக் மற்றும் அபிஷேக் போரல் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை அமைக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது.

அதையடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் சிக்ஸ் அடிக்க முயன்ற பந்து எல்லைக் கோட்டருகே கேட்ச் ஆனது. ஆனால் அந்த கேட்ச் இப்போது ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேட்ச் பிடித்த வீரர் பவுண்டரி லைனுக்கு மிக அருகில் நின்றார்.

அவர் கால் பவுண்டரி லைனில் பட்டது போல ஒரு சில ஆங்கிள்களில் தெரிந்தது. ஆனாலும் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சனின் விக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்விக்கு முக்கியக் காரணியாக அமைந்தது. இதனால் சமூகவலைதளங்களில் நடுவர்கள் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.