வெள்ளி, 28 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 மார்ச் 2025 (11:04 IST)

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

Kohli Dhoni

ஐபிஎல் போட்டிகளில் இன்று நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஐபிஎல் சீசன்களில் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில் சிஎஸ்கே, ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட ஜாம்பவான் அணிகள் மோதிக் கொள்ளும் மேட்ச் என்றால் கூடுதல் பரபரப்பு நிலவுகிறது. அவ்வாறாக இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன.

 

இந்த சீசனின் முதல் போட்டியை இரு அணிகளுமே வெற்றிப்பெற்று தொடங்கியுள்ள நிலையில் இரண்டாவது வெற்றி யாருக்கு என்பதற்கான மோதல் இன்று நடைபெறுகிறது. இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்வது என களமிறங்கியுள்ள ஆர்சிபி தொடக்க ஆட்டத்திலேயே அதிரடி ஆட்டத்தை காட்டி நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை கலங்கடித்தது.

 

மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ப்ளே ஆப் தகுதி பெறுவதற்காக சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதிய நிலையில், ஆர்சிபி அணி சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ப்ளே ஆப் சென்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் அதற்கு பதிலடியாக ஆர்சிபியை வீழ்த்துமா சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற எதிர்பார்ப்பும்  உள்ளது.

 

இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 33 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் அதில் 21 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி 11 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்த போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடைபெறும் நிலையில் மஞ்சள் படையினருக்கு குறைவிருக்காது என்றாலும், ஆர்சிபி ரசிகர்களும் ஏராளமாக வருவார்கள்.

 

போட்டியை காண செல்லும் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ மற்றும் பேருந்து வசதிகள் வழங்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K